ரெயிலில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சா பறிமுதல்
ரெயிலில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா பொட்டலங்கள் அதிகளவில் ரெயில்கள் மூலமாக கடத்தப்படுவது சமீபநாட்களாக அதிகரித்துள்ளது. இதனை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரெயில்வே போலீசாருடன் இணைந்து ரோந்தில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நேற்று ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் வரை செல்லும் ரெயிலில் சோதனை நடத்தினர்.
அப்போது அதில், ஒரு பெட்டியில் கழிப்பறை அருகே கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அதற்கு பயணிகள் யாரும் உரிமை கோரவில்லை. இதனால் போலீசார் அந்த பையை திறந்து பார்த்தனர். அதில் 6 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அதை கைப்பற்றி ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.