சென்னையில் இருந்து 6 பன்னாட்டு விமான சேவைகள் ரத்து...!
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இருந்து 6 பன்னாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஆலந்தூர்,
மாண்டஸ் புயல் காரணம் பலத்த காற்று வீசும் என்பதால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஏ.டி.ஆர். சிறிய ரக விமானங்கள் கொண்ட 27 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் தற்போது 3 பன்னாட்டு விமானங்கள் கொண்ட 6 சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நள்ளிரவு 12.50 மணிக்கு கொழும்பு சென்றுவிட்டு அதிகாலை 4.20 மணிக்கு சென்னை திரும்பும் விமானமும் அபுதாபியில் இருந்து இரவு 7.50 மணிக்கு வந்து சென்னையில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் விமானமும் மாலை 6 மணிக்கு சென்னை வந்து விட்டு காலை 7 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய ரீயூனியன் செண்ட் டென்னிஸ் செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.