தமிழகத்தில் ஆண்டுதோறும் 6 % மின்கட்டணம் உயர்த்த அனுமதி
தமிழகத்தில் மின் கட்டணத்தை ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்த்திக்கொள்ள மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை
தற்போது குடிசை விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டு தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
2 மாதங்களுக்கு மொத்தம் 700 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.96 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.83 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.275-ம், மொத்தம் 800 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.26 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (0.53 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.395-ம், 900 யூனிட்டுகள் வரை நுகர்வு செய்யும் 84 ஆயிரம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.35 சதவீதம்) மாதத்துக்கு ரூ.565-ம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் குறைக்கப்பட்ட மின்சாரத்துக்குரிய மின் மானியத்தை நுகர்வோர் விரும்பும் பட்சத்தில் "மின் மானியத்தை தாமாக விட்டுக் கொடுக்கும்" திட்டம் மூலம் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்நிலையில் மின் கட்டண உயர்வு குறித்த கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, மின்சார வாரிய இணையதளங்களில் மின்சார கட்டண விவரங்கள் வெளியிடப்படும் என்றும் மின் கட்டண உயர்வு தொடர்பான கருத்துகளை தெரிவிக்க 30 நாட்கள் காலஅவகாசம் வழங்கியும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக்த்தில் எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் மின் கட்டணம் உயர்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 100 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டமும், குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி முதலியவற்றின் மின்சார மானியமும் தொடரும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உயர்த்தப்பட்ட மின் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், மின் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்திக்கொள்ள மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஜூலை 1ம் தேதி மின் கட்டணத்தை ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.