லோன் வாங்கி தருவதாக கூறி சாப்ட்வேர் என்ஜினீயரிடம் 5.5 லட்சம் சுருட்டல் - பகீர் தகவல்

பர்சனல் லோன் எடுக்க செக்யூரிட்டி தேவைக்காக கையெழுத்திட்ட 15 காலி செக்கை சாப்ட்வேட் என்ஜினீயர் கொடுத்துள்ளார்

Update: 2022-09-18 09:14 GMT

ஆலந்தூர் ,

ஆதம்பாக்கம் குட் ஷெட் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 41). சாப்ட்வேர் என்ஜினீயர். இவரும் இவருடைய மனைவியும் சேர்ந்து சொந்தமாக அதே பகுதியில் சிறிய மென்பொருள் கம்பெனி நடத்தி வருகின்றனர். இவருடைய கம்பெனி வளர்ச்சிக்காக பர்சனல் லோன் எடுக்க முடிவு செய்தனர் .

அப்பொது பிரகாஷின் நண்பர் ஒருவர் மூலமாக லோன் ஏற்பாடு செய்து தரும் பெருமாள் என்பவர் அறிமுகமானார். இதையடுத்து பிரகாஷ் , பெருமாளிடம் தன்னுடைய ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை , கம்பெனிக்கான ஆதாரங்களையும் தந்துள்ளார். அது மட்டுமின்றி செக்யூரிட்டி தேவைக்காக கையெழுத்திட்ட 15 காலி செக்கை பெருமாளிடம் கொடுத்துள்ளார்.இதை பெற்றுக்கொண்ட பெருமாள் தி. நகர் உள்ள வங்கிக் கிளையிலிருந்து சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்றுள்ளார்.

இது குறித்து பிரகாஷூக்கு வங்கியிலிருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை கண்ட பிரகாஷ் அதிர்ச்சடைந்தார். உடனடியாக இது குறித்து விசாரிக்கும் பொழுது பெருமாள் என்பவர் பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது . இதையடுத்து பிரகாஷ் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.   

Tags:    

மேலும் செய்திகள்