52 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

கம்பத்தில் தடை செய்யப்பட்ட 52 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2022-11-24 00:30 IST

கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக நகராட்சி ஆணையாளர் பாலமுருகனுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் அரசக்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சுருளியப்பன், திருப்பதி, லெனின் ஆகியோர் கம்பம் நகர் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அதில் தடை செய்யப்பட்ட 52 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்று தொடர்ந்து சோதனை நடத்தப்படும். கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்