65 பயனாளிகளுக்கு ரூ.51¼ லட்சம் நலத்திட்ட உதவி
நாட்டறம்பள்ளியில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் 65 பயனாளிகளுக்கு ரூ.51¼ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
நலத்திட்ட உதவி
நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நிறைவு விழா நடந்தது. கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர் வரவேற்றார். தனி தாசில்தார் சுமதி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், ஒன்றிய கவுன்சிலர் க.உமா கன்ரங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 65 பயனாளிகளுக்கு ரூ.51 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அப்போது முன்பு ஜமாபந்தி என்றால் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தங்களின் கோரிக்கை மனுக்களை அளிப்பார்கள். ஆனால் தற்போது பல்வேறு முகாம்கள் நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாலும், ஆன்லைன் மூலம் மனுக்கள் பெறப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்படுவதாலும் மனுக்கள் கொடுப்பது குறைந்துள்ளது.
நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள அனைத்து வணிக வளாகங்கள், கட்டிடங்கள் அகற்றப்படும்.
பட்டா வழங்க இயலாது
அங்குள்ளவர்களுக்கு பட்டா வழங்க இயலாது. நிலம் சம்பந்தமாக பிரச்சினைகள் இருந்தால் அதை வருவாய்த் துறை மூலம் தீர்க்க இயலாது. நீதிமன்றத்தை அணுக வேண்டும்.
தகுதியானவர்களுக்கு மனுக்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அதிக அளவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என கூறி, பொதுமக்கள் அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கினார்.
துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். இறுதியில் நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார் நன்றி கூறினார்.