கடலூர் புயல் தடுப்பு சரகம் மூலம் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்க ஏற்பாடு

கடலூர் புயல் தடுப்பு சரகம் மூலம் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-07-08 20:17 GMT

கடலூர் நடுவீரப்பட்டு அருகே உள்ள மூலக்குப்பம் கிராம பகுதியில் தமிழ்நாடு வனத்துறை மூலம் அமைக்கப்பட்ட நாற்றங்காலில் பல வகையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பசுமை போர்வையை உயர்த்தவும், கடலூர் மாவட்டத்தில் பசுமை போர்வையை அதிகரிக்கவும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், மாவட்ட வன அலுவலர் வழிகாட்டுதலின்படி மரக்கன்றுகளை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக நபார்டு மற்றும் தமிழ்நாடு காலநிலை மாற்றம் மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் கடலூர் புயல் தடுப்பு வனச்சரகத்தில் (தேக்கு, மகாகனி, செம்மரம், பலா, வேங்கை) போன்ற பலவகையான சுமார் 50 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இலவசமாக வழங்கப்படும்

விவசாயிகள், அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பொது இடங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

ஆகவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக மரக்கன்றுகளை பெற்று தங்களது நிலத்தில் நட்டு பயன் பெறுமாறு தமிழ்நாடு வனத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மரக்கன்றுகள் தொடர்பான தகவல்களுக்கு புயல் தடுப்பு வனச்சரகர் பாரதிதாசன் (9566729898) மற்றும் வனவர் ரவிகுமார் (9843012324), வனவர் வேல்முருகன் (9787931858) ஆகியோரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை புயல் தடுப்பு சரகம் வனச்சரக அலுவலர் பாரதிதாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்