கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பந்தலூர்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில் இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஜீப்பை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஜீப்பை ஓட்டி வந்தவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அதில் அவர், எருமாடு பகுதியை சேர்ந்த சஜி (வயது 50) என்பதும், கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து ஜீப் மற்றும் 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றினர். மேலும் சஜியை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.