புதுக்கடை அருகேஆட்டோவில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

புதுக்கடை அருகேஆட்டோவில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-19 18:45 GMT

புதுக்கடை:

கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் வேணுகோபால், பொறியாளர் நாகராஜன் ஆகியோர் நேற்று முன்தினம் கீழ்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால், டிரைவர் ஆட்டோைவ நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். இதையடுத்து அதிகாரிகள் தங்களது வாகனத்தில் ஆட்டோவை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். அதிகாரிகள் வருவதை கண்ட டிரைவர் ஆட்டோவை சாலையோரமாக நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். அதிகாரிகள் ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் ஆட்டோவுடன் 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து காப்புக்காடு அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.

-----

Tags:    

மேலும் செய்திகள்