ஆரணி, சேத்துப்பட்டு, போளூர் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த 50 விவசாயிகள் வேளாண் சுற்றுலா
ஆரணி, சேத்துப்பட்டு, போளூர் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த 50 விவசாயிகள் வேளாண் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
ஆரணி
ஆரணி, சேத்துப்பட்டு, போளூர் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த 50 விவசாயிகள் வேளாண் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
மேற்கு ஆரணி ஒன்றியத்தின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் ஆத்மா திட்டத்தின் கீழ் வேளாண் பண்ணை எந்திரங்கள் தகவல் மையம் சார்பில் 50 விவசாயிகள் சென்னை தேசிய வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்திற்கு வேளாண் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதில் சேத்துப்பட்டு, மேற்கு ஆரணி, போளூர் வட்டாரத்தை சார்ந்த விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
விவசாய பணிகளில் எந்திரங்களின் நன்மைகள் மற்றும் தேவைகள் எவ்விதம் பயன்படுத்துவது அதனுடைய திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிககப்பட்டது. இதில் வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள் ஜீவா, லோகேஷ், மேற்கு ஆரணி ஒன்றிய வேளாண்மை உதவி இயக்குனர் த. செல்லதுரை, வேளாண்மை அலுவலர் எஸ்.கீதா, வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஆர்.பாஸ்கரன், சி. பிரேம் குமார் ஆகியோர் வேளாண் சுற்றுலாவில் விவசாயிகளுடன் சென்றுள்ளனர்.=========