சாலையோரம் கேட்பாரற்று கிடந்த 50 ரேஷன் அரிசி மூட்டைகள்

அரகண்டநல்லூர் அருகே சாலையோரம் கேட்பாரற்று கிடந்த 50 ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி செல்ல முயன்ற மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2022-08-25 16:38 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட ஆலம்பாடி கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அரகண்டநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரத்தில் ஏராளமான மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு கேட்பாரற்ற நிலையில் இருந்தது. சந்தேகத்தின் பேரில் ஒரு மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. தலா 40 கிலோ வீதம் 50 மூட்டைகளில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இவற்றை மர்ம நபர்கள் கடத்தி செல்ல முயன்றபோது தகவல் அறிந்து போலீசார் வந்ததால் அரிசி மூட்டைகளை அங்கேயே போட்டு வி்ட்டு தப்பி சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் அரகண்ட நல்லூர் போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசியை கடத்தி செல்ல முயன்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்