வெந்நீர் ஊற்றி கணவனை கொன்ற பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை

வெந்நீர் ஊற்றி கணவனை கொன்ற பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-01-25 19:08 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த வள்ளுவம்பாக்கம் அசோகபுரம் இடையன்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி காமாட்சி (வயது 40). இவர்கள் இருவரும் கூலி தொழிலாளிகள். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

முருகன் மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 23.12.2017 அன்று வழக்கம் போல் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த காமாட்சி வெந்நீரை முருகன் மீது ஊற்றினார். படுகாயம் அடைந்த முருகனை சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் மறுநாள் உயிரிழந்தார்.

இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப் பதிவு செய்து காமாட்சியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராணிப்பேட்டை மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது.

நீதிபதி, ஜான் சுந்தரலால் சுரேஷ் வழக்கை விசாரித்து, காமாட்சிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அதைத்தொடர்ந்து காமாட்சி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்