திசையன்விளை அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கூலித் தொழிலாளி கைது

திசையன்விளை அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-27 09:41 GMT

வள்ளியூர்,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள ஆனைகுடியை சேர்ந்தவர் முத்து(வயது35). கூலித் தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள 5 வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பக்கத்திலுள்ள தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

அப்போது சிறுமி கூச்சலிட்டதால் பக்கத்தில் நின்றவர்கள் முத்துவை பிடித்து திசையன்விளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துவை பிடித்து விசாரனை செய்தனர். பின்னர், அவரை வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாகுமாரி, கூலி தொழிலாளி முத்து மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.

இந்த சம்பவம் திசையன்விளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்