முன்னெச்சரிக்கையாக 5 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்

முன்னெச்சரிக்கையாக 5 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்;

Update:2022-10-09 00:15 IST

வேதாரண்யம் தாலுகாவில் வடகிழக்கு பருவமழையால் சாலைகளில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்ய முன்னெச்சரிக்கையாக நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தற்போது மணல் மூட்டைகள் தயார் செய்யும் பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது 5 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நெடுஞ்சாலைகளில் ஆறுகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்யும் வகையில் சாலை ஓரங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் அனைத்து இடர்பாடுகளையும் சமாளிக்க நெடுஞ்சாலைத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்