உயர் கல்வி படிக்கும் 5,389 மாணவிகளுக்கு ரூ.95½ லட்சம் உதவித்தொகை-கலெக்டர் சாந்தி தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் உயர்கல்வி படிக்கும் 5 ஆயிரத்து 389 மாணவ, மாணவிகளுக்கு கடந்த 2 மாதங்களில் ரூ.95 லட்சத்து 50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-22 19:00 GMT

உதவித்தொகை

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்து உயர் கல்வியியல் சேர்ந்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக முதல்- அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதங்களில் மொத்தம் 5 ஆயிரத்து 389 மாணவிகளுக்கு தலா ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.95 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மாணவிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக இந்த தொகை சேர்க்கப்படுகிறது.

போட்டி தேர்வுகள்

மாணவிகள் இந்த உதவித்தொகையை உயர்கல்வி கற்பதற்கும், புத்தகங்கள் வாங்குவது போன்ற ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

சிறந்த கல்வியை கற்பதோடு பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்தி கொள்வதற்கும் இந்த தொகையை பயன்படுத்தி உயர்ந்த இடத்தை மாணவிகள் அனைவரும் எட்ட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்