கடலூரில் சினிமா பாணியில் காப்பகத்திலிருந்து தப்பியோடிய 5 பேர்.. அதிர்ச்சியில் போலீஸ்
தப்பி ஓடிய நபர்கள் குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் அன்புஜோதி ஆசிரமம் செயல்பட்டு வந்தது. இங்கு முதியவர்கள், ஆதரவற்றோர் அன நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறனர்.
இதனிடையே ஆசிரமத்தில் சிலர் கானாமல் போனதாகவும், பாலியல் அத்துமீறல் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்த நிலையில், இதனை சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆசிரமத்தில் இருந்தவர்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அரசு அங்கீகாரமுள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அதேபோல, கடலூரில் உள்ள காப்பகம் ஒன்றில் 25 பேர் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் கடந்தமாதம் 4 பேர் காப்பகத்தில் இருந்து தப்பியோடினர்.
இந்த நிலையில் மீண்டும் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோடியுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட போர்வைகளை கயிறாக பயன்படுத்தி மாடியில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
இவர்கள் ஏன் காப்பகத்தில் இருந்து தப்பியோடினார்கள் என்றும், இவர்களை யாராவது மிரட்டினார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.