மது விற்ற 5 பேர் கைது

மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-15 19:14 GMT

கரூர் மாவட்ட மது விலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஈசனத்தத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் (வயது 33), தங்கராஜ் (58), அரசு காலனியை சேர்ந்த ஜீவானந்தம் (31), ராமநாதபுரத்தை சேர்ந்த உதயராஜா (34) புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த விக்னேஸ்வரன் (27) ஆகிய 5 பேரும் பல்வேறு இடங்களில் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 38 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்