வாலிபர்கள் உள்பட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தாடிக்கொம்பு அருகே மில் உரிமையாளரை கடத்திய வழக்கில் சிக்கிய வாலிபர்கள் உள்பட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-08-28 17:17 GMT

தாடிக்கொம்புவை அடுத்த உலகம்பட்டியை சேர்ந்த மில் உரிமையாளர் வில்வபதி, மேலாளர் வினோத்குமார். இவர்கள் 2 பேரையும் கடந்த மாதம் 8-ந்தேதி மர்ம கும்பல் ஒன்று கடத்திச்சென்று அவர்களின் உறவினர்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் தாடிகொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மில் உரிமையாளர், மேலாளரை கடத்தியது புதுடெல்லி, மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஆசீப் உசேன் (வயது 47), ஜீர்வானி பாபு (48), முகமது அசாத் (29), முகமது சந்த் என்ற சோனு (25), முகமது கரீம் (32) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், கடத்தப்பட்டவர்களையும் மீட்டனர். பின்னர் ஆசீப் உசேன் உள்பட 5 பேரையும் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இந்த நிலையில் கைதான 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்கும்படி மாவட்ட கலெக்டர் விசாகனுக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். அதன் பேரில் ஆசீப் உசேன் உள்பட 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்