ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ஆயுதங்களுடன் 5 பேர் சிக்கினர்

ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ஆயுதங்களுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2023-10-13 02:15 IST


மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது எம்.கே.புரம் ஒரு பள்ளியின் பின்புறம் ஒரு கும்பல் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது விருதுநகர் வடக்குமடையை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 34), அவனியாபுரம் எம்.எம்.சி.காலனி பழனிக்குமார் (43), உசிலம்பட்டி பாலகிருஷ்ணாபுரம் வீரசுபாஷ் (33), அவனியாபுரம் பெரியசாமிநகர் பாலகிருஷ்ணன் (50), ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் மணிராஜா (40) என்பதும், அவர்கள் கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருப்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் ஆயுதங்களை காட்டி அந்த பகுதியில் செல்பவர்களிடம் நகை, பணம் ஆகியவற்றை பறிக்க திட்டமிட்டிருப்பதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்