ரெயில்வே டெப்போவில் திருடிய 5 பேர் கைது

ரெயில்வே டெப்போவில் திருடிய 5 பேர் கைது

Update: 2023-08-02 18:45 GMT

போத்தனூர்

கோவை போத்தனூர் ரெயில் நிலையம் அருகே, ரெயில்வே டெப்போஉள்ளது. இந்த டெப்போவில் கடந்தசில நாட்களாகபொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.

இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் விவரம் வருமாறு:-1. முகமதுதாரிக் (வயது21), உக்கடம் அல்அமீன்காலனி, 2. அபுதாகீர் (22), 3. அப்துல்காதர் (22), ஜி.எம்.நகர், 4. சஞ்சய் என்ற சன்னி (19), 5.பாலாஜி (27), தியாகி சிவராமன் நகர் ஆவர். இவர்களிடம் இருந்து 7 மடிக்கணினிகள், ஸ்கூட்டர் மற்றும் ரெயில்வே டெப்போவில் திருடிய பொருட்கள் உள்பட ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் கோவை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்