கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது

கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-21 18:33 GMT

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரையான்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கத்தின் மனைவி சுமதி(வயது 46). இவர் சம்பவத்தன்று வயலில் மாடு மேய்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அதே கிராமத்தை சேர்ந்த சந்துரு (20), அஜித் (21), அருண்குமார் (19), மாமுண்டி (41), வினோத்குமார் (21), நந்தகுமார் (20) ஆகியோர் தகாத வார்த்தைகளில் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. இது பற்றி கேட்ட சுமதியையும் தகாத வார்த்தையில் திட்டி உள்ளனர். மேலும் இதனை தட்டிக்கேட்ட சுமதியின் மகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சுமதி திருமானூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சந்துரு, அஜித், அருண்குமார், மாமுண்டி, வினோத்குமார் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நந்தகுமாரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்