வீட்டில் பதுக்கிய ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

பண்ருட்டியில் வீட்டில் பதுக்கிய ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-24 18:45 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டியில் உள்ள சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மாறுவேடத்தில் வாடிக்கையாளர் போல் சென்று வி.எஸ்.பி. நகரில் உள்ள ஒரு பங்க் கடையில் புகையிலை பொருட்கள் கேட்டார். அப்போது அந்த கடை உரிமையாளர் சங்கர் என்பவர் அங்கு பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை எடுத்து அவரிடம் கொடுத்தார். அப்போது கையும், களவுமாக சங்கரை சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா பிடித்து விசாரணை நடத்தினார்.

கைது

இதில் அவர் கடையின் பின்புறத்தில் உள்ள தனது வீட்டில் 6 மூட்டையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. மேலும் புகையிலை பொருட்களை ஒறையூர் பகுதியை சேர்ந்த பிரபாகர் (35), ஆனத்தூர் பகுதியை சேர்ந்த சித்திக் அலி (33) ஆகியோர் கடத்தி வந்து சங்கர் மூலம் மற்ற கடைகளுக்கும் விற்பனை செய்து வந்தது தெரிந்தது.

இதையடுத்து சங்கர் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ்.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், கார், 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்