5 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்

5 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-09-22 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை தாலுகாவில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் வழிகாட்டுதலின்படி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஜெயராஜ், தர்மர் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் சி.கே.மங்கலம், திருவாடானையில் உள்ள ஓட்டல்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குளிர்சாதன பெட்டியில் அதிக அளவு கலர் பயன்படுத்தி பொறித்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கோழி இறைச்சி இருப்பதை கண்டறிந்து அதனை கைப்பற்றி அழித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள உணவு கடைகளில் தடை செய்யப்பட்ட 3 கிலோ பிளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 4 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியதுடன் ரூ.1 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்