பெரியநாயக்கன்பாளையத்தில் 5½ கிலோ கஞ்சா பறிமுதல்
பெரியநாயக்கன்பாளையத்தில் 5½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இடிகரை
கோவை பிரஸ் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் தனிப்படையினர் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பிச்செல்ல முயன்றார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர், வீரபாண்டி பிரிவை சேர்ந்த சஞ்சய் கிருஷ்ணன் (வயது 29) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த 5½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சஞ்சய் கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.