செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி...!

செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

Update: 2023-08-07 12:14 GMT

சென்னை,

சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது. தற்போது செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த கோர்ட்டு, செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.  இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியை வரும் 12ம் தேதி வரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

முன்னதாக செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது என கூறி அவரது மனைவி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் இல்லை. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடையில்லை என்று கூறி செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டை அணுகவும் உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்