செல்போன் கடை உரிமையாளரை தாக்கிய 5 பேர் கைது

செல்போன் கடை உரிமையாளரை தாக்கிய 5 பேர் கைது

Update: 2023-05-19 19:44 GMT

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலை காந்தி சிலை அருகில் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்திருப்பவர் கண்ணன். சம்பவத்தன்று முன்விரோதம் காரணமாக கடைக்குள் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல் கண்ணனையும், கடையில் இருந்தவர்களையும் தாக்கி விட்டு தப்பி ஓடியது. இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசில் கண்ணன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பட்டுக்கோட்டையை சேர்ந்த சிலம்பரசன் (வயது 34), சேதுபதி (34), சீனிவாசன் (28), தயாநிதி (29), கோபி (25) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்