கீழ்பென்னாத்தூரில் நடந்த ஜமாபந்தியில் 406 பேருக்கு ரூ.71 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

கீழ்பென்னாத்தூரில் நடந்த ஜமாபந்தியில் 406 பேருக்கு ரூ.71 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2023-05-24 11:15 GMT

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூரில் நடந்த ஜமாபந்தியில் 406 பேருக்கு ரூ.71 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் 3 நாட்கள் ஜமாபந்தி நடந்தது. திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் மந்தாகினி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 698 மனுக்களை பெற்றார். இதில் 406 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு நடந்தது.

ஒன்றிய குழு தலைவர்கள் கீழ்பென்னாத்தூர் அய்யாக்கண்ணு, துரிஞ்சாபுரம் தமயந்தி ஏழுமலை, தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் அன்பு, பேரூராட்சி தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் சாப்ஜான் வரவேற்றுபேசினார்.

விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு வருவாய்த்துறை சார்பில் வீட்டுமனை பட்டா 110 பேருக்கும், வட்ட வழங்கல் பிரிவு 150 பேருக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தில் 5 பேருக்கும் என மொத்தம் ரூ.71 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் 406 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இவை தவிர பட்டா மாற்றம், சாதிச்சான்று, வாக்காளர் அடையாள அட்டை, ஆதரவற்ற விதவை சான்று போன்றவையும் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டது.

முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்