கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக்கழகம் மூலம் 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்

கோடை விடுமுறை நிறைவு பெற உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கும்பகோணம் கோட்டம் மூலம் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-03 19:30 GMT

கோடை விடுமுறை நிறைவு பெற உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கும்பகோணம் கோட்டம் மூலம் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

400 சிறப்பு பஸ்கள்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதை முன்னிட்டு கோடை விடுமுறையில் வெளியூர் சென்றிருந்தவர்கள் ஊருக்கு திருப்ப வசதியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதேபோல் சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 250 சிறப்பு பஸ்களும், திருச்சியில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய ஊர்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய ஊர்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 150 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

பயணிகள் வசதி 

மேலும் முக்கிய பஸ் நிலையங்களில் போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள் பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ் போக்குவரத்து சீராக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்