கொரோனாவுக்கு 40 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 40 பேர் பாதிக்கப்பட்டனர்.
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 35 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 பேர், ஓமலூரில் 5 பேர், நரசிங்கப்புரத்தில் 3 பேர், சேலம் ஒன்றியம், நங்கவள்ளி, சங்ககிரி, பனமரத்துப்பட்டி, தலைவாசல், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் சேலத்துக்கு வந்த நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் உள்பட 218 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 25 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.