ஓட்டலை அடித்து நொறுக்கிய 4 வாலிபா்கள் கைது

ஓட்டலை அடித்து நொறுக்கிய 4 வாலிபா்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-16 20:30 GMT

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு 4 வாலிபர்கள் சாப்பிட வந்தனர். அவர்கள் சாப்பிட்டுவிட்டு அதற்கு பணம் தராமல் ஓட்டல் காசாளர் முகமதுரியாசிடம் தகராறில் ஈடுபட்டு, ஓட்டலை அடித்து நொறுக்கினர். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசில் முகமதுரியாஸ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்த கார்த்திக்(வயது 29), அர்ஜூன்(23), தவசி (21), ரூபன் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் 4 பேர் மீதும் திருச்சியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்