மதுபானம் விற்ற 4 பேர் கைது
போடியில் மதுபானம் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
போடி,
போடி நகர் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் 4 பேர் மதுபான பாட்டில்களுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் போடி முந்தலை பகுதியை சேர்ந்த மாசுக்களை (வயது 27), விழுப்புரத்தை சேர்ந்த புஷ்பராஜ் (30), புதுக்காலனியை சேர்ந்த முனியாண்டி (60), குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த மகாராஜா (50) என்பதும், மதுபானம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.