சாராயம் விற்ற 4 பேர் கைது

சாராயம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-07-06 18:42 GMT

கச்சிராயப்பாளையம், 

கச்சிராயப்பாளையம் அருகே கரடிசித்தூர் கிராமத்தில் அதிக அளவில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் கரடிசித்தூர் கிராமத்தில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்ததாக ஆறுமுகம் (வயது 62), தேவேந்திரன் (42), அலெக்ஸ்பாண்டியன் (29), கண்ணு சாமி ரமேஷ் (32) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்