மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது

மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது

Update: 2022-10-02 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் வசந்தம் நகர் பகுதியில் நேற்று ஆசாரிபள்ளம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 47) என்பவர் மது விற்பனையில் ஈடுபட்டார். இதனைதொடர்ந்து செல்வகுமாரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 21 மது பாட்டில்களும், ரூ.4 ஆயிரத்து 400-ஐ பறிமுதல் செய்தனர். இதேபோல, கோட்டார் போலீசார் நேற்று வட்டவிளை பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட அதேபகுதியை சேர்ந்த கண்ணன் (34) மற்றும் கீழராமன் புதூரில் மது விற்றதாக அதே பகுதியை சேர்ந்த தாமஸ் (53) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 16 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பார்வதிபுரம் பகுதியில் மது விற்றதாக அதே பகுதியை சேர்ந்த காந்திமதி நாதன் (54) என்பவரை வடசேரி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்