செல்போன் கடை ஊழியர் ெகாலை வழக்கில் 4 பேர் போலீசில் சரண்

செல்போன் கடை ஊழியர் ெகாலை வழக்கில் 4 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.

Update: 2022-08-05 19:34 GMT

குத்திக்கொலை

பெரம்பலூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த கோபாலின் மகன் வினோத்(வயது 28). இவர் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர், தனது நண்பர் காஞ்சன் என்ற கார்த்திக்குடன்(25) நிர்மலா நகரில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், வினோத்தை கத்தியால் குத்தி கொலை செய்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த வின்சன், வினோத்தின் நண்பர் ஆவார். வின்சனுடன் அடிதடி சம்பவத்தில் கம்பன் தெருவை சேர்ந்த பூவாயி என்ற பூவரசன், பிரித்திகைவாசன் ஆகியோருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இதில் வின்சன் மீது தாக்குதல் முயற்சி நடந்தது. பின்னர் பூவரசன் கோஷ்டியை சேர்ந்த பிரத்திஷை, வினோத் கோஷ்டியினர் தாக்கி உள்ளனர்.

4 பேர் சரண்

இதன் காரணமாக பூவரசன், பிரித்திகைவாசன் மற்றும் பாரதிதாசன் நகரை சேர்ந்த பப்லு என்ற சத்தியமூர்த்தி, மணி, எளம்பலூர் சாலையை சேர்ந்த பிரத்திஷ், நவீன் என 6 பேரும் சேர்ந்து வினோத்தை படுகொலை செய்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து பெரம்பலூர் போலீசார் பூவரசன், பிரித்திகைவாசன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 4 பேர் நேற்று மாலை பெரம்பலூர் போலீசில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்