சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

திருமருகல், கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-26 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல், கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரோந்து பணி

திருமருகல் அருகே கங்களாஞ்சேரி பகுதியில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கங்களாஞ்சேரியில் சாராயம் விற்ற 2 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். இதனால் போலீசார் அவர்களை விரட்டி சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் திருமாளம் தெற்குதெருவை சேர்ந்த தங்கையன் மகன் கண்ணன் (வயது 20) என்பதும், தப்பி ஓடியவர் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜீவ் காந்தி என்பதும் தெரிய வந்தது. இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

4 பேர் கைது

இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ராஜீவ் காந்தியை வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோல ஆதலையூர் பாலம் அருகே சாராயம் விற்ற கேதாரிமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த ஆனந்த் (40) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

கீழ்வேளூர் அருகே வடக்காலத்தூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வடக்காலத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் சாராயம் விற்ற, அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் (வயது 56), புதுச்சேரி மெயின் ரோட்டில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த தங்கையன் மனைவி மீனா (45) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்