வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் சாவு

வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-07-30 23:01 GMT


வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மயங்கி விழுந்து சாவு

மதுரை அவனியாபுரம் ஜே.ஜே. நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி சுசீலா (வயது 50). சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்து பலியானார். இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை நரிமேடு தாமஸ்தெருவை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரது மனைவி ரகிலா பானு (38). சம்பவத்தன்று, இவர் வீட்டில் மாமியாருடன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் இவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை

தெற்குவாசல் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த காளிராஜ் என்பவரின் மனைவி ஜோதிலட்சுமி (23). இவர்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு திருமணமானது. இந்தநிலையில், வரதட்சணை கொடுமை காரணமாக, கணவரை பிரிந்து தந்தையுடன் வசித்து வந்த ஜோதிலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தெற்குவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதுராமநாதபுரம் சாலை கம்பர்தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரி (52). இவர் குடும்பப்பிரச்சிசனை காரணமாக உறவினர்களிடம் கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்த அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்