ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பேர் சிக்கினர்

உத்தமபாளையத்தில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-15 19:00 GMT

உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு தலைமையில் போலீசார் கம்பம்- கூடலூர் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 5½ கிலோ கஞ்சா கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டோவில் இருந்த 4 பேைர பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கம்பத்தை சேர்ந்த துரைப்பாண்டி மனைவி இந்திராணி (வயது 51), நாராயணதேவன்பட்டி முத்தையா (39), கம்பத்தை சேர்ந்த பூமிநாதன் (29), அன்பரசன் என்றும், அவர்கள் ஆந்திரா மாநிலத்தில் கஞ்சாவை வாங்கி கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு அவர்களை கைது செய்தனர். பின்னர் ஆட்டோவையும், கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்