4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ஆண்டிப்பாளையம் கிராமம் அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 46), முன்னாள் ராணுவ வீரர். இவர், கடந்த அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக மாரிமுத்துவின் மனைவி கவிதா, அவரது கள்ளக்காதலன் செட்டித்தாங்கலை சேர்ந்த வேன் டிரைவர் சங்கர், சிறுமூர் பாபு என்கிற திருமாலன், அடையபுலம் பிரகாஷ்ராஜ், அப்பு ஆகிய 5 ேபரை கண்ணமங்கலம் போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் கவிதாவை தவிர மற்ற 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதனையடுத்து சங்கர், பாபு, பிரகாஷ்ராஜ், அப்பு ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.