திருவள்ளூரில் தி.மு.க நிர்வாகியை அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேர் கைது

திருவள்ளூரில் தி.மு.க நிர்வாகியை அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-05-10 13:45 IST

திருவள்ளூர் ஜே.என்ரோடு, காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 32). இவர் திருவள்ளூர் தி.மு.க மாணவரணி துணை அமைப்பாளராக உள்ளார். மேலும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி எதிரே மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 4-ந் தேதி காலை மருந்து கடையில் இருந்த போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் கலைவாணனை கை, கால், தலை, உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். படுகாயமடைந்த கலைவாணனை தற்போது சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆண்டனி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து கலைவாணனை வெட்டிய நபர்களை தேடி வந்தார். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த காந்திபுரம் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் மற்றும் ஆகாஷ் (21), சந்துரு என்ற சந்திரசேகர் (36), சந்தோஷ் (22) ஆகிய 4 பேரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ஆகாஷ், சந்துரு, சந்தோஷ் ஆகிய 3 பேரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 18 வயது சிறுவனை இளம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை கெல்லீசில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள பிராங்கிளின் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்