லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது
பழனியில் லாட்டரி சீட்டு விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பழனி நகர் போலீசார் பஸ்நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த பழனி அடிவாரத்தை சேர்ந்த முருகன் (வயது 48), மணிகண்டன் (31) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் பழனி பழைய அஞ்சலக சாலை பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக பழனி தட்டான்குளத்தை சேர்ந்த செல்வராஜ் (42), திருஆவினன்குடி பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக பழனி பெரிய கடைவீதியை சேர்ந்த முத்துமணி (44) ஆகியோரை அடிவாரம் போலீசார் கைது செய்தனர்.