மேலும் 4 பேர் கைது
சிவகாசி அருகே வாலிபர் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே வாலிபர் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாலிபர் கொலை
சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லைன் நேருஜி நகரை சேர்ந்த ஈஸ்வர பாண்டியன் (வயது26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோகுல்குமார் (26) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தகராறு ஏற்பட்டது.
இதில் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈஸ்வர பாண்டியன் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் மது அருந்திக் கொண்டு இருந்த போது அங்கு வந்த கோகுல் குமார் மற்றும் சிலர் ஈஸ்வரபாண்டியனிடம் தகராறு செய்துள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த கோகுல்குமார் மற்றும் அவருடன் வந்தவர்கள் ஈஸ்வர பாண்டியனை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
4 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகாசி டவுன் போலீசார், ஈஸ்வர பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக கோகுல் குமாரை கைது செய்து மற்றவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக கார்த்தீஸ்வரன் என்கிற குட்ட கார்த்தி (24), கணேஷ்பாண்டியன் (23), ஜீவா (19), ராஜேஷ் (20) ஆகிய 4 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி, சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.