விக்கிரவாண்டி- கும்பகோணம் 4 வழிச்சாலை பணி: போராட்டக்குழுவினர் அறிவித்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் அதிகாரி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு

விக்கிரவாண்டி- கும்பகோணம் 4 வழிச்சாலை பணி தொடா்பா க போராட்டக்குழுவினர் அறிவித்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.;

Update:2022-08-10 22:10 IST


விக்கிரவாண்டி- கும்பகோணம் 4 வழிச்சாலை பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதை விரைந்து முடிக்கக்கோரி நெய்வேலி ஆர்ச்கேட் அருகில் விக்கிரவாண்டி- கும்பகோணம் சாலை போராட்டக்குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் போராட்டக்குழுவினரை கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.

அதன்படி நேற்று கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை அவரது அலுவலகத்தில் நடந்தது. இதில் நகாய் மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள், போராட்டக்குழு தலைவர் முத்துவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளரும், துணை மேயருமான தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், சி.ஐ.டி.யு. வேல்முருகன், எல்.எல்.எப். காசிநாதன், ராஜேந்திரன், காங்கிரஸ் இளங்கோவன், ஐ.என்.டி.யு.சி. ரவிக்குமார், ம.தி.மு.க. பிச்சை, எஸ்.சி.எஸ்.டி. பணியாளர் சங்கம் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) இறுதிக்குள் விக்கிரவாண்டி- சேத்தியாத்தோப்பு வரை ஒரு வழிசாலை பணிகளை நிறைவு செய்வது, நவம்பர் 2023-க்குள் முழு சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணியை நிறைவு செய்வது என நகாய், தனியார் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இதை கேட்ட போராட்டக்குழுவினர் சாலை மறியல் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்