செல்போன் கோபுரத்தில் வயர்கள் திருடிய 4 பேர் கைது

செல்போன் கோபுரத்தில் வயர்கள் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-28 17:55 GMT

கரூர், 

கரூர் மண்மங்கலத்தில் இருந்து என்.புதூர் செல்லும் சாலையில் தனியார் நிறுவனத்தின் செல்போன் கோபுரம் ஒன்று உள்ளது. அங்கு நேற்று முன்தினம் 4 பேர் கொண்ட கும்பல் புகுந்து செல்போன் கோபுரத்தில் இருந்த ரேடியோ பிரிகுவன்சி வயர்களை திருடி ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த அந்த தனியார் நிறுவன ரோமிங் ஆபீஸர் ரமேஷ் (34) அந்த மர்ம நபர்களை கையும், களவுமாக பிடித்து வாங்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் வெங்கமேட்டை சேர்ந்த சுரேந்தர் (25), ஹரிகரன் (21), அப்பி பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (26), கருப்பம் பாளையத்தை சேர்ந்த கார்த்திக் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ மற்றும் வயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்