திருக்காட்டுப்பள்ளி
தஞ்சை மாவட்டம், பூதலூர் கொடும்புறார் நகர் பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தார். அப்போது அங்கு மது விற்றுக் கொண்டிருந்த முருகேசன் (வயது 41), அன்பு (50) ஆகிய 2 பேரை கைது செய்தார். அவர்களிடம் இருந்து 13 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றின் படித்துறை அருகில் மதுபாட்டில்களை பதுக்கி விற்றுக்கொண்டிருந்த விஷ்ணம்பேட்டை காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அலெக்சாண்டர் (49) என்பவரை கைது செய்தார். அவரிடம் 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பழமானேரி சாலை பகுதியில் மது விற்ற தென்னங்குடி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நீதிராஜன் (24) கைது செய்யப்பட்டார்.