கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது
உசிலம்பட்டி அருகே கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி புத்தூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில் கஞ்சா கடத்தி வந்த கீரிபட்டி சேர்ந்த சொக்கன் மகன் ராமமூர்த்தி (வயது 33), சொக்கன் மனைவி ஒச்சமாள் (55), கீழப்புதூரை சேர்ந்த ராமர் மகன் விஜயக்குமார் (38), கவுண்டன்பட்டியை சேர்ந்த பால்பாண்டி மகன் ராஜ்குமார் (26) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா, ஒரு ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.