அனுமதியின்றி பட்டாசு திரி தயாரித்த 4 பேர் கைது

அனுமதியின்றி பட்டாசு திரி தயாரித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-07 19:01 GMT

தாயில்பட்டி,

தாயில்பட்டி பகுதியில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிமுருகன், ராமமூர்த்தி, ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் போலீசார் ராமலிங்கபுரம், அசேபா காலனி, பசும்பொன் நகர் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது ராமலிங்கபுரத்தில் பட்டாசு திரி தயாரித்து கொண்டிருந்த பாலமுருகன் (வயது 35), ராஜா (55), வீரராஜ் (50), செல்வராஜ் (60) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த தலா 40 குரோஸ் வெள்ளைத்திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்