பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
லாலாபேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் பின்புறம் பணம் வைத்து சூதாடுவதாக லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், அந்த பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தனியார் பள்ளி பின்புறம் பணம் வைத்து சூதாடியதாக பிள்ளபாளையம் காஞ்சி நகர் பகுதியை சேர்ந்த முருகானந்தம் (வயது 39), லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (42), செல்வம் (32), பிள்ளபாளையத்தை சேர்ந்த மகேந்திரன் (36) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.ஆயிரம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.