பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
தியாகதுருகம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம்
தியாகதுருகம் அருகே முடியனூர் பகுதியில் வரஞ்சரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியநாயகி அம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் முடியனூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் சுப்பரமணியன்(வயது 39), சுப்பரமணியன் மகன் அசோகன்(35), கலியன் மகன் மணி(24) மற்றும் மடம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ரமேஷ்(33) என்பது தெரியவந்தது. இவா்கள் 4 பேரையும் கைதுசெய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.400-ஐ பறிமுதல் செய்தனர்.