இளையான்குடி
இளையான்குடி போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழநெட்டூர் சமுதாயக்கூடம் அருகே சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சித்திரை செல்வம்(வயது 33), கமல்(31), அசோக் குமார்(28), கோவிந்தராஜ்(34) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.