கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி:
திருச்சி உறையூர் பாளையம்பஜார் வாலாஜாரோடு பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன்(வயது 40). இவர் புத்தூர் குழுமாயிஅம்மன் கோவில் அருகே நேற்று காலை சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 4 பேர் வழிமறித்தனர். அவர்கள், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,500-ஐ பறித்தனர். இது குறித்து பத்மநாபன் அளித்த புகாரின்பேரில், அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், திருச்சி குமரன்நகரை சேர்ந்த வெற்றிசெல்வன்(27), சண்முகாநகரை சேர்ந்த ரகுபதி (26), ரெங்காநகரை சேர்ந்த ஹரிஸ்குமார்(20), உறையூர் டி.டி.ரோட்டை சேர்ந்த கிருஷ்ணராஜன்(20) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், இவர்களுக்கு உறையூர், அரசு மருத்துவமனை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவத்திலும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர்.